உள்ளூர் செய்திகள்

அன்பை வளர்ப்போம்

* சித்தம் ஒரு கண்ணாடி. ஓயாமல் அதில் பராசக்தியை தியானம் செய்தால் அவளுடைய பிம்பம் அதில் விழும்.* இருதயத்தில் தூய்மையான எண்ணங்களை நிறுத்திப் பழகினால் உடம்பிலும் தெய்வத்தன்மை உண்டாகும்.* வியக்கும் விதமாக நன்மை கைகூட வேண்டுமானால் அதற்கு தெய்வபக்தி ஒன்றே தக்க உபாயம்.* அன்பே வாழ்க்கை. அன்பு ஒரு கண நேரம் கண் மூடினால் கூட உலகமே அழிந்து போகும்.* அன்பை வளர்த்துக் கொண்டால் உலகத் துயரம் எல்லாம் எளிதில் மறைந்துபோகும்.- பாரதியார்