அன்பினால் மாறுவது எது?
UPDATED : ஜூலை 09, 2013 | ADDED : ஜூலை 09, 2013
* சத்தியமாக இருக்கும் கடவுள் ஒருவரே. அவரை ஆராதிக்கும் வழிகளே உ<லகில் பலவாக இருக்கின்றன. * கடவுள் நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் மனிதன் அன்றாடம் தியானம் செய்யவேண்டியது அவசியம்.* தனியிடத்தில் அமர்ந்தபடி, மனதில் உயர்ந்த சிந்தனைகளை பரவ விட்டபடி தியானத்தை செய்யுங்கள். இதில் ஒருநாளும் தவறக்கூடாது. * தர்மம் செய்வது நம் கடமை. அதில் உண்டாகும் விளைவை கருத்தில் கொள்வது கூடாது.* தெளிந்த அறிவும், இடைவிடாத முயற்சியும் இருந்தால் சக்தியுண்டாகும்.* மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு ஒப்பாகும்.* பெரிய கஷ்டங்களை வாழ்வில் சந்தித்தபிறகே சிறிய உண்மைகள் மனிதனுக்கு புலப்படுகின்றன.* அன்பினால் உலகிலுள்ள துன்பத்தை எளிதாக மாற்றி விட முடியும்.* தன்னை மறந்து விடு. தெய்வத்தை மட்டும் நம்பு. எல்லா இன்பங்களையும் பெறுவாய், இது சத்தியம்.- பாரதியார்