அமைதியாக செயலாற்று!
* சுயலாபத்திற்காக பிறருக்குத் துன்பம் விளைவிப்பவர்கள் வெறுப்பு என்னும் வலையில் சிக்கித் தவிப்பர்.* கருமியை ஈகையாலும், பொய்யரை உண்மையாலும் வெற்றி கொள்ள முயலுங்கள்.* வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் அமைதியுடன் செயலாற்றிக் கொண்டிருங்கள்.* மிதமிஞ்சிய சுகபோகம் தேவையில்லை. கொடிய விரதத்தையும் கடைபிடிக்க வேண்டியதில்லை.* நூறு ஆண்டுகள் ஒழுங்கீனமாக வாழ்வதை விட, ஒழுக்கத்துடன் ஒருநாள் வாழ்வது சிறந்தது.* சாத்திரங்களை படித்து ஒப்புவிப்பதை விட அதில் ஒன்றையாவது கடைபிடித்து வாழ்வது நல்லது.* மனத்தூய்மையுடன் வாழ்பவன் இம்மைக்கும், மறுமைக்கும் நன்மையைத் தேடிக் கொள்கிறான்.* மெய்யைப் பொய்யாகவும், பொய்யை மெய்யாகவும் காண்பவன் வாழ்வில் கடைத்தேற முடியாது. * பாவச் செயலில் மறந்தும் ஈடுபடுவது கூடாது. அது பழுத்து பயன் விளைக்கும்போது தாங்க முடியாத வேதனையை உண்டாக்கும். - புத்தர்