செய்வன திருத்தச் செய்
UPDATED : ஏப் 11, 2014 | ADDED : ஏப் 11, 2014
* எதைச் செய்தாலும் திருந்தச் செய்யுங்கள். அதுவே வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும். * வாழ்வில் கஷ்ட நஷ்டம் இருக்கத்தான் செய்யும். அது இயல்பானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். * குடும்பத்திற்காக மட்டுமின்றி, இந்த சமுதாயத்திற்காகவும் பயனுள்ளவராக வாழுங்கள். * எரியும் நெருப்பில் கவனம் வைப்பது போல, வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கவனம் வையுங்கள். * நிகழ்காலமான இந்த கணத்தில் வாழுங்கள். வாழ்வின் இனிமையை அனுபவித்து மகிழுங்கள். - புத்தர்