உள்ளூர் செய்திகள்

உதவுவதில் தான் மகிழ்வு

* கார்மேகத்தில் இருந்து விடுபட்ட நிலவு போல உண்மையின் ஒளி ஊர் எங்கும் பிரகாசிக்கும்.* உலக வாழ்வின் நோக்கமே பிறருக்கு உதவி செய்து மகிழ்வது தான். * எல்லாம் தெரியும் என எண்ணுபவன் முட்டாள். ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது புத்தியிருக்கும். * நறுமலர்களை விட நல்ல ஒழுக்கத்தின் மணம் இனிமை மிக்கது. அதை வாழ்வில் கடைபிடியுங்கள். * பயனில்லாத ஆயிரம் வார்த்தை சொல்வதை விட, பயன் தரும் அர்த்தமுள்ள ஒரு வார்த்தை மேலானது. - புத்தர்