உழைப்பால் முன்னேறு!
UPDATED : செப் 19, 2014 | ADDED : செப் 19, 2014
* இரக்க சிந்தனையை யாரும் சொல்லித் தர முடியாது. அது இயல்பாய் மனதில் அமைந்திருக்க வேண்டும்.* சுயபரிசோதனை மூலம் நம்மிடம் உள்ள தீய குணங்களை அகற்ற முடியும்.* உழைப்பின் மூலம் முன்னேறுங்கள். தூய்மையும், நேர்மையும் உங்களின் இரு கைகளாக இருக்கட்டும்.* பயன் விளையும் என கருதினால் மட்டுமே பேசுங்கள். இல்லாவிட்டால் மவுனமாகவே இருங்கள்.* காலம் காலமாக சொல்லப்பட்டு வந்ததற்காக ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.- புத்தர்