அன்புமயமான கடவுள்
UPDATED : மே 20, 2013 | ADDED : மே 20, 2013
* மனிதன் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பு காட்ட வேண்டும். தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.* எல்லா உயிர்களிடமும் இரக்கம் கொண்ட மனிதன் கடவுளுக்கு மிகவும் நெருக்கமுள்ளவனாக இருக்கிறான்.* பிறருடைய அந்தரங்க விஷயங்களைத் தெரிந்து கொள்ள காது கொடுக்காதீர்கள். * மனிதனாக வாழ அடிப்படையானது நல்லொழுக்கம். எனவே, அதனை உயிரினும் பெரிதாக பெரியவர்கள் போற்றுகின்றனர்.* தீய வழிகளில் செல்வதைக் கட்டுப்படுத்தி, நற்பண்புகளுடன் வாழ்வதே நன்னடத்தை.* கடவுள் அன்பு மயமானவர். அவரை வழிபடுவோருக்கு அன்பு நிறைந்த இதயம் வேண்டும். * உயர்வு, தாழ்வு கருதி ஜாதிபாகுபாடு கொள்வது பாவம். ஒழுக்கமுள்ளவர், ஒழுக்கமற்றவர் என்று இரண்டு ஜாதிகள் மட்டுமே உலகிலுண்டு. * ஆன்மிக வாழ்வில் ஒருவருக்கு தெய்வபக்தியும், ஜீவகாருண்யமும் இரு கண்களைப் போன்றவை.- கமலாத்மானந்தர்