அனாவசிய பேச்சு வேண்டாம்

* சாதாரண மனிதன் இந்திரியங்கள் எனப்படும் புலன்களுக்கு அடிமையாகிச் சிக்கித் தவிப்பான். ஆனால், விவேகியோ பெரிய காட்டு யானையைப் பிடித்துப் பழக்கித் தன் பணிக்கு ஏவும் யானைப் பாகனைப் போல இருப்பான்.
* நாம் எவ்வளவோ பேசுகிறோம், பார்க் கிறோம். அதன் காரணமாக நமது மனதில் எத்தனையோ மனோ விகாரங்கள் ஏற்படுகின்றன. மனம் அடக்கப்படாத குதிரை போல தறிகெட்டு ஓடுகிறது. ஆனால், தொடர் முயற்சியால் மன அடக்கம் உண்டாகும்.
* மனதை நெறிப்படுத்துவதற்கு விடா முயற்சியும், பயிற்சியும், வைராக்கிய சிந்தனையுமே வழி.
* அனாவசியமான பேச்சும், அவசியமில்லாத பொழுது உண்ணும் உணவும் மனிதனைக் கெடுக்கின்றன. அதனால் தான் திருவள்ளுவர் ''யாகாவாராயினும் நாகாக்க'' என்று குறிப்பிடுகிறார்.
* சுவைக்கு அடிமைப்பட்டு அளவுக்கு அதிகமாக உண்பது கூடாது. உணவில் தூய்மை உண்டாகும் போது, எண்ணங்கள் தூய்மையாகிவிடும். அதன்பின் நம் சொல்லும் செயலும் மேம்பாடு பெறும்.