உள்ளூர் செய்திகள்

காத்திருப்பவனே நல்லவன்

* மணம் வீசும் மலர் போல, உயர்ந்த எண்ணங்களை மனதில் பரப்புங்கள்.* நல்லது செய்வதற்குரிய வாய்ப்புக்காக காத்திருப்பவனே நல்லவன்.* வாழ்வில் குறுக்கிடும் பிரச்னைகளைக் கண்டு கலங்க வேண்டாம். அவை நம்மை பக்குவப்படுத்துகின்றன.* லட்சியத்திற்காக வாழ்வை அர்ப்பணியுங்கள். தனக்காக வாழாமல் பிறருக்காக வாழுங்கள்.* ஏழை எளியவர்கள் நடமாடும் கோவில்கள். அவர்களுக்கு உதவி செய்தால் கடவுள் மகிழ்கிறார்.* நூலறிவைக் காட்டிலும் பட்டறிவே மனிதனுக்குக் கைகொடுத்து வழிகாட்டுகிறது.-கமலாத்மானந்தர்