தூய அன்பு வேண்டும்
UPDATED : அக் 25, 2015 | ADDED : அக் 25, 2015
* பிறரிடம் பலன் எதிர்பார்த்து அன்பு செலுத்துவது கூடாது. கைமாறு கருதாத அன்பே தூய்மை மிக்கது.* ஆணவம் நிழல் போல மனிதனை விடாமல் பற்றி இருக்கிறது. அதை அகற்றுவது எளிதானது அல்ல.* அவித்த நெல் மீண்டும் முளைப்பதில்லை. அதுபோல, ஆசையற்ற ஞானிகள் மண்ணில் மீண்டும் பிறப்பதில்லை.* இரு கண்களும் கண்ணாடியைப் போல, மனதில் இருப்பதை அப்படியே மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி விடும்.ராமகிருஷ்ணர்