கடவுளைத் தேடுங்கள்
UPDATED : நவ 10, 2013 | ADDED : நவ 10, 2013
* பூமியின் நான்கு திசையிலும் தேடிச் சென்றாலும் ஒரு இடத்திலும் கடவுளைக் காண முடியாது. அவர் உள்ளத்தின் ஆழத்தில் உறைந்திருக்கிறார்.* பிறருடைய குற்றத்தைப் பற்றிப் பேசுபவன் காலத்தை வீணாகக் கழிக்கிறான். அதனால், அவன் தன் நிலையிலிருந்து தாழ்ந்து விடுகிறான்.* கடின உழைப்பும், விடாமுயற்சியும் கொண்டவனுக்கு எல்லாம் உண்டாகும். அது இல்லாதவனுக்கு ஒன்றும் கிடைக்காது.* பழங்கள் நிறைந்த மரம் எப்போதும் கனத்தினால் தாழ்ந்து வளையும். அதுபோல, பெருமைப்பட வாழ வேண்டுமானால் அடக்கமும், பணிவும் கொண்டிருங்கள்.* வாழ்வில் முதலில் கடவுளைத் தேடுங்கள். பிறகு பொருளைச் சம்பாதியுங்கள். இதனைப் பின்பற்றினால் நிம்மதியை அடையலாம்.- ராமகிருஷ்ணர்