நன்மையைத் தேடுங்கள்
UPDATED : அக் 15, 2014 | ADDED : அக் 15, 2014
* நேர்மையுடன் வாழ்ந்தால் புத்தி தெளிவும், மன அமைதியும் இருக்கும்.* பிடிவாத குணத்தால் மனிதன் தனக்குத் தானே கஷ்டத்தைத் தேடிக் கொள்கிறான்.* நல்லவன் கண்களுக்கு உலகில் மலிந்திருக்கும் கேடுகள் தெரிவதில்லை.* அன்புள்ளத்தில் அருள் சுரந்து கொண்டேயிருக்கும். அதன் மூலம் அகிலமே நன்மை பெறும்.* பொறுமை, அமைதி இரண்டையும் இரு கண்களாகப் போற்றுங்கள். நல்ல மனிதன் இருக்குமிடம் எப்போதும் வெளிச்சமாகவே இருக்கும்.* ஆசை என்னும் வியாதிக்கு சிகிச்சை செய்ய முடியாது.- சாந்தானந்தர்