உள்ளூர் செய்திகள்

இதுவும் ஆண்டவன் கட்டளையே!

* எப்போதும் பயன் தரும் பணியில் ஈடுபடுங்கள். உற்சாகமுடன் இருக்க இதுவே சிறந்த வழி.* கடவுளின் ஆற்றலை அறிவால் அளக்க முயலாதீர்கள். அன்புக்கு மட்டுமே அவர் அடிபணிவார்.* கடவுளின் கையில் நாம் ஒரு கருவியாகி விட்டால், அகந்தை சிறிதும் உண்டாகாது.* மரத்திலுள்ள இலை, காற்றில் அசைவது கூட, ஆண்டவன் கட்டளைப்படியே நடக்கிறது.* பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். மனதை இப்போதே கடவுளின் பக்கம் திருப்புங்கள்.-சாரதாதேவியார்