ஆன்மீக வளர்ச்சிக்கு தடையாக இருப்பது
UPDATED : ஆக 10, 2015 | ADDED : ஆக 10, 2015
* நீங்கள் உங்களுக்குள் வளர்ச்சி பெறும்போது, உங்களுக்குள் பெருமையும் முன்முடிவுகளும் இருக்காது. தூய்மையான, ஆழமான பொருள் பொதிந்திருப்பதாய் உங்கள் செயல் அமையும்.* உடலுடன் நீங்கள் கொண்டுள்ள அடையாளம்தான் உங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. உடலுறவல்ல!* எந்த வேலையிலும் மனஅழுத்தம் என்பது இல்லை, உங்கள் உடல், மனம் மற்றும் உணர்வுகளை கையாளத் தெரியாததே உங்களை மனஅழுத்தத்திற்கு உட்படுத்துகிறது. தேடுதல் என்றால் உங்களுக்கு தெரியாதை ஒத்துக் கொள்வது.* உங்கள் பதிவுகளை நீங்கள் துடைத்துவிட்டால், உண்மை தானாகவே உங்களுக்குள் பதிந்துவிடும்.சத்குரு