மகிழ்ச்சிக்கு வழிகாட்டு
UPDATED : பிப் 12, 2016 | ADDED : பிப் 12, 2016
* தெரியாத ஒன்றைத் தெரிந்து கொள்ளும் முயற்சியே கல்வி. அது மகிழ்ச்சியான வாழ்விற்கு வழிகாட்ட வேண்டும்.*மனம் அமைதியில் திளைக்கும் போது தான் ஒரு மனிதனுடைய முழு திறமையும் வெளிப்படத் தொடங்கும்.* ஆன்மிகம் என்பது வாழ்வின் ஒரு அங்கமே. அதைத் தேடி காட்டிற்கோ அல்லது ஆஸ்ரமத்திற்கோ யாரும் போகத் தேவையில்லை.* இளமைக்காலம் ஆற்றல் மிக்கது. அப்போது சரியான வழிகாட்டுதல் இருந்தால் வாழ்வு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.-ஜக்கி வாசுதேவ்