பெற்றோரை மதியுங்கள்
UPDATED : பிப் 02, 2016 | ADDED : பிப் 02, 2016
*பெற்றோர், வயதில் மூத்தவர்கள், நல்லவர்களை மதித்துப் போற்றுங்கள்.* துன்பத்தில் வாடுபவர்கள் மீது பரிவு காட்டுங்கள். அவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.*எளிமையாக வாழ்வதில் விருப்பம் கொள்ளுங்கள். கவுரவத்திற்காக ஆடம்பரம், வீண் செலவுகளில் ஈடுபடாதீர்கள்.*எல்லோரையும் நேசியுங்கள். யாரிடமும் பகையுணர்வு வேண்டாம். அனைவரும் கடவுளின் பிள்ளைகளே.* உலகத்தின் ஏகபோக உரிமையாளரான கடவுளைத் தவிர, வேறு யாராலும் நம்மைக் காப்பாற்ற முடியாது.-ஷீரடி பாபா