உண்மையும் பொய்யும்
UPDATED : செப் 05, 2025 | ADDED : செப் 05, 2025
கல்வியாளர் இருவர் ஒருமுறை முல்லாவைச் சந்தித்தனர். அதில் ஒருவர், ''முல்லா அவர்களே... உலகில் பொய்யை விட உண்மைக்கு மதிப்பு அதிகமாகி விட்டதே...'' எனக் கேட்டார்.''நானும் ஒரு கேள்வி கேட்கிறேன். இரும்பை விடத் தங்கத்துக்கு மதிப்பு அதிகமாகி விட்டதே...'' எனக் கேட்டார்.''என்ன இப்படி கேட்டீர்கள். இரும்புதான் நிறைய கிடைக்குமே. அதனால் அது குறைவாக மதிக்கப்படுகிறது. ஆனால் தங்கம் அப்படியா... எங்கோ ஓரிடத்தில் குறைவாகவே கிடைக்கும். அதனால் மதிப்பு அதிகம்'' என்றார் கல்வியாளர். ''பார்த்தீரா... நீங்கள் சொன்னதில் உங்கள் கேள்விக்கும் விடை உள்ளது. அதாவது உலகில் பொய்யை பலர் பேசுகிறார்கள். ஆனால் உண்மை பேசுவோரை காண்பதே அரிதாகி விட்டது'' என்றார் முல்லா.