நிறைகளை யோசி
                              UPDATED : அக் 30, 2025 | ADDED : அக் 30, 2025 
                            
                          
அப்துல் ஹமீது தன் மூதாதையர் கட்டிய வீட்டை விற்க நினைத்தார். அதற்காக தரகரிடம் சொல்ல, அவரும் ஒருவரை அழைத்து வந்தார். வீட்டைக் காட்டிய போது 'காற்றோட்டம், இடவசதி, தோட்டம், ஒன்றரை அடிச் சுவர் என இங்கு வசதி நிறைய இருக்கு' என ஹமீதின் வீட்டைப் பற்றி பட்டியல் இட்டார் தரகர். 'அடடே... நம்ம வீட்ல இவ்வளவு வசதி இருக்கா? இது நமக்கு தெரியவில்லையே' என யோசித்தார் ஹமீது. வீடு வாங்க வந்தவரோ, ''என் மனைவியிடம் பேசி விட்டு நாளை சொல்கிறேன்'' என புறப்பட்டார். அவர் சென்றவுடன், ''வீட்டை விற்கப் போவதில்லை. என்னை மன்னிச்சிடுங்க'' என்றார் ஹமீது. இது தெரியாமல் தான் பலரும் தன்னிடம் உள்ள நிறைகளை யோசிக்காமல், குறைகளை பற்றியே சிந்திக்கின்றனர். அதனால் மனச்சோர்வுக்கும் ஆளாகின்றனர். எப்போதும் நல்லதை நினைத்தால் மனச்சோர்வு எப்படி வரும்?