மூன்றே நாளில்...
UPDATED : நவ 06, 2025 | ADDED : நவ 06, 2025
ஒட்டகம் ஒன்றை பூமிக்கு வரைவழைத்தார் ஸாலிஹ் நபி. அதைக் கண்ட ஸமூது சமுதாயத்தினர் சிலர் துன்புறுத்தி கொலை செய்தனர். இதனால் கோபம் கொண்ட ஸாலிஹ், '' தீமை செய்த உங்களுக்கு மூன்றே நாளில் தண்டனை கிடைக்கும். முதல் நாள் உங்களின் முகம் வெளுக்கும்; இரண்டாம் நாள் சிவக்கும்; மூன்றாம் நாள் கறுக்கும். பின்பு உயிர் போகும்'' என சாபமிட்டார்.அதனால் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர். அன்றிரவு மலைக்குகை ஒன்றில் ஸாலிஹ் தொழுகைக்காக வரவிருப்பதை அறிந்து மறைவாக காத்திருந்தனர். அந்த சமயத்தில் பலத்த காற்று வீச பாறை ஒன்று உருண்டு குகையின் வாசலை அடைக்கவே வெளியேற முடியாமல் திணறினர். ஸாலிஹ் சொன்னபடியே முதல் நாள் முகம் வெளுத்தது. மறுநாள் சிவந்தது. மூன்றாம் நாள் கறுத்தது. இந்நிலையில் வானவரான ஜிப்ரீல் பயங்கர சப்தத்தை எழுப்ப அவர்களின் உயிர் பிரிந்தது.