உள்ளூர் செய்திகள்

பெண்ணுக்கு முன்னுரிமை

தாய் வீட்டில் எந்த சூழலில் பெண் வளர்ந்தாளோ, திருமணத்திற்கு பிறகும் அதே சூழல் அமைய வேண்டும் என விரும்புவாள். அப்படி அமையாவிட்டால் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என பிடிவாதம் செய்வாள். இதற்காகவே தன் மனைவியரின் விருப்பத்திற்கு முதலிடம் கொடுத்தார் நபிகள் நாயகம். அவரது மனைவியருக்கு மஸ்ஜிதுந் நபவிக்குப் (பள்ளிவாசல்) அருகிலேயே வீடுகளை அமைத்துக் கொடுத்தார். மனைவியரில் ஒருவரான மாரியதுல் கிப்திய்யா (ரலி) மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்தார். பசுமையான பகுதியான எகிப்து நாட்டைச் சேர்ந்த இவரால் பாலைவனத்தில் எப்படி வாழ முடியும் எனக் கருதி 'அல் அவாலி' என்ற பசுமை மிக்க பகுதியில் தங்க வைத்தார். பெண்களின் உணர்வுக்கு முன்னுரிமை கொடுங்கள்.