உள்ளூர் செய்திகள்

துஆ செய்யுங்கள்

ஒருசமயம் குடிகாரன் தள்ளாடிய நிலையில் புலம்பிக் கொண்டிருந்தான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த தோழர்கள் கோபத்துடன், 'இவனுக்கு இறைவன் சாபம் உண்டாகட்டும்' என்றனர். ஆனால் நபிகள் நாயகம், ''தோழர்களே... கோபம் கொள்ளதீர்கள். மற்றவர்களுக்கு கேடு உண்டாகும் படி சாபமிடாதீர்கள். இவன் திருந்தி நேர்வழியில் செல்ல வேண்டும் என துஆ செய்யுங்கள்'' என்றார்.