அனுபவ பாடம்
UPDATED : ஆக 22, 2024 | ADDED : ஆக 22, 2024
ஆதிமனிதனான ஹஜ்ரத் ஆதம் தன் இறுதிக் காலத்தில், ''இறைவனை சந்தோஷப்படுத்தும் செயலைச் செய்யுங்கள். அவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடங்கள். சுகபோகங்களில் எச்சரிக்கையாக இருங்கள்'' என மக்களுக்கு அறிவுறுத்தினார். தான் பெற்ற அனுபவ பாடங்களை தன் மகன் ஹஜ்ரத் ஷீத்திடம் விவரித்தார். ''உலகத்தின் மீது அதிகப்பற்று வைக்காதே. எந்த பணியில் ஈடுபட்டாலும் அதன் முடிவைப் பற்றி யோசி. மனம் போன போக்கில் செல்லாதே. சுவர்க்கத்தில் இருந்த கனியை சாப்பிட்டதால் என் வாழ்க்கை தடம் புரண்டது. மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு எதையும் முடிவு செய். வானவர்களிடம் ஆலோசனை செய்திருந்தால் நான் சொர்க்கத்தை விட்டு பூமிக்கு வந்திருக்க மாட்டேன்'' என்றார்.