சிறந்த பரிகாரம்
UPDATED : டிச 06, 2024 | ADDED : டிச 06, 2024
உறவினர், நண்பர், அண்டை வீட்டார் என பலருடன் மனிதன் பழகுகிறான். அப்போது பேச்சாலும், செயலாலும் குற்றங்களைச் செய்து பாவத்திற்கு ஆளாகிறான். இந்த பாவங்களைப் போக்க தொழுகை, தர்மம் சிறந்த பரிகாரம். இதன் மூலம் இறைவனிடம் மன்னிப்பு கிடைக்கும். ஆனால் ஒரு நிபந்தனை; பாவத்தில் இருந்து தொழுகை விடுவிக்கும். மீண்டும் பாவச்செயல்களில் ஈடுபடக் கூடாது.