நீங்கள் பாக்கியசாலி
UPDATED : ஜன 30, 2025 | ADDED : ஜன 30, 2025
இரவில் எழுந்து தான் தொழுகை செய்வதோடு, தன் மனைவியையும் ஒருவர் எழுப்புகிறார். ஆனால் அவரது மனைவி எழுந்திட மறுக்கிறாள். அவளது முகத்தில் தண்ணீரைத் தெளித்து எழச் செய்வதோடு தொழுகையில் ஈடுபடவும் வைக்கிறார் என்றால் அவருக்கு இறைவன் அருள் செய்வான். இது கணவருக்கும் பொருந்தும். இப்படி தொழுதாலும், தொழ வைத்தாலும் நீங்கள் பாக்கியசாலி.