மணவாழ்வு சிறக்க...
UPDATED : மார் 07, 2025 | ADDED : மார் 07, 2025
நபிகள் நாயகத்திடம் மணவாழ்வில் ஈடுபட விரும்புவதாகவும், அதற்கு வழிகாட்டும்படி வேண்டினார் ஒரு இளைஞர். அதற்கு அவர், ''முதலில் மனதிற்கேற்ப நல்ல பெண்ணை தேர்வு செய். அப்போதுதான் உனக்கும், அப்பெண்ணிற்கும் இடையே அன்பு பரிமாற்றம் ஏற்படும்'' என்றார். அந்த இளைஞன், ''கட்டாயப்படுத்தி ஒரு பெண்ணை திருமணம் செய்யலாமா'' எனக் கேட்டதற்கு, ''கூடாது. விதவைப் பெண்ணிடம் ஒப்புதல் பெறும் வரையிலும், கன்னிப் பெண்ணிடம் அனுமதி பெறும் வரையிலும் திருமணம் செய்ய கூடாது. பெண்ணின் சம்மதம் பெற்றால் தான் மணவாழ்வு சிறக்கும்'' என்றார்.