தாயின் வயிற்றில்...
UPDATED : மார் 28, 2025 | ADDED : மார் 28, 2025
தாயின் வயிற்றில் நாற்பது பகல் அல்லது இரவு கரு சேமிக்கப்படும். பின் 40 நாட்கள் அது அட்டை போல கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும். அதாவது ஒரு கருக்கட்டியாக மாறும். அதன்பின் 40 நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்றதொரு சதைப்பிண்டமாக மாறும். அப்போது அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுவார். அவருக்கு நான்கு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. 1. கருவில் இருக்கும் மனிதனின் வாழ்வாதாரம். 2. வாழ்நாள்3. செயல்பாடு 4. இறுதியில் அவன் துர்பாக்கியசாலியா அல்லது நற்பாக்கியசாலியா என பதிவு செய்யப்படும். கடைசியில் கருவினுள் உயிர் ஊதப்படும்.