உள்ளூர் செய்திகள்

பயங்கரமான காற்று

நான்காம் அல்லது ஏழாம் வானத்திற்கு அடியில் ஒரு காற்றைப் படைத்து வைத்திருக்கிறான் இறைவன். இக்காற்றை 70 ஆயிரம் பலத்த இரும்புச் சங்கிலிகளைக் கொண்டு கட்டிப் போட்டு வைத்துள்ளான். அந்த ஒவ்வொரு சங்கிலியையும் 70 வானவர்கள் அழுத்திப் பிடித்து வைத்துள்ளனர். இறுதி நாள் நெருங்கும் போது ஹஜ்ரத் இஸ்ராபீல் (அலை) எக்காளம் ஊதியதும் பெரும் சப்தத்துடன் இக்காற்று விடுவிக்கப்படும். இதன் வேகம் எப்படி இருக்கும் தெரியுமா... பெரிய மலை கூட பஞ்சு போல் பறந்து விடும். இப்படிப்பட்ட காற்றின் சிறிய பாகத்தை ஆது சமுதாயத்தினர் வாழும் பக்கம் வீசச் செய்தான். காரணம் அவர்கள் ஒழுக்கம் இல்லாமல் வாழ்ந்து தீய செயல்களை செய்தனர். இக்காற்று தான் அவர்கள் வேண்டிய கருமேகத்தை தள்ளிக் கொண்டே வந்தது. அக்கூட்டத்தினர் வசிக்கும் பகுதியில் இருந்த மலைகள் மீது வட்டமிட ஆரம்பித்தது மேகம். சிலர் இதைக் கண்டதும் 'மழை வரப் போகிறதே' என மகிழ்ந்தனர்.