உள்ளூர் செய்திகள்

பெண் பார்க்கப்போறீங்களா...

நல்ல குணமுள்ள பெண்ணுடன் வாழ்வதே இன்பத்தில் மேலானது. இதற்காக நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்ய வேண்டும். ஒரு பெண்ணை குறிப்பிட்ட மாப்பிள்ளைக்கு பேசிக் கொண்டிருக்கும் போது இன்னொருவர் குறுக்கிடக் கூடாது. ஏதாவது காரணத்தால் திருமணம் தடைபட்டால் மட்டுமே வேறொருவர் தலையிட வேண்டும். மணம் முடிக்க முடிவு செய்ததும் 'மஹர்' என்னும் திருமணத்திற்கான கட்டணத்தை கொடுத்து விட வேண்டும். பெண் என்பவள் புனிதமானவள். நம் இல்லம் தேடி வரும் அரசி. அவளுக்கு விருப்பம் இல்லாதபோது, வற்புறுத்தி திருமணம் செய்யக் கூடாது.