உழைக்கும் கைகளே
UPDATED : ஜூன் 26, 2025 | ADDED : ஜூன் 26, 2025
எப்போதும் இறைவணக்கத்தில் ஈடுபட்டார் ஒரு நபர். அவரைக் கண்ட நபிகள் நாயகம், ''நானும் தினமும் இவரைப் பார்க்கிறேன். இரவு பகல் பாராமல் இறைசிந்தனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார். அப்படியானால் இவருடைய குடும்பம் எப்படி நடக்கும்'' என தோழரிடம் கேட்டார்.''இவருக்கு சகோதரர் ஒருவர் இருக்கிறார். விறகுவெட்டியான அவருடைய உழைப்பில் தான் குடும்பம் நடக்கிறது'' என்றார் தோழர். ''இரவும் பகலும் தொழுகையில் ஈடுபடும் இவரை விட எப்போதும் உழைக்கும் கைகளே சிறந்தது. குடும்பத்தின் தேவையை நிறைவேற்ற உழைத்து சம்பாதிப்பதும் இறைவணக்கம் தான்'' என்றார்.