உள்ளூர் செய்திகள்

திருப்பிக் கொடு

அறிவு வளர புத்தகங்கள், நாளிதழ்களை படிக்க வேண்டும். இதற்காக தினமும் நுாலகம் செல்வது அவசியம். பலர் நுாலகத்தில் இருக்கும் புத்தகங்களை வீட்டில் படிப்பதற்காக கொண்டு செல்கின்றனர். ஆனால் அவர்களில் சிலர் புத்தகத்தை உரிய நேரத்தில் திருப்பிக் கொடுப்பதில்லை. இது தவறான செயல். பிறரிடம் இருந்து எதை வாங்கினாலும், அதை திருப்பிக் கொடுப்பதே முறை. ஒருவேளை அதே பொருளை திருப்பிக் கொடுக்க முடியாவிட்டால், புதிதாக கூட வாங்கிக் கொடுங்கள்.