தர்மம் செய்தால்...
UPDATED : டிச 25, 2025 | ADDED : டிச 25, 2025
தோழரான அபூதல்ஹா, ''எனது சொத்தில் மிகவும் பிடித்தது 'பைரஹா' தோட்டம். இறையருளைப் பெற அதை தர்மம் செய்ய விரும்புகிறேன்'' என நபிகள் நாயகத்திடம் கூறினார். அவரின் உயர்ந்த நோக்கத்தை அறிந்து மகிழ்ந்தார். ''அமோக விளைச்சல் தரும் அந்த தோட்டத்தை ஏழை உறவினருக்கு கொடு'' என்றார். அவரும் அப்படியே செய்தார். இதைப் போல தர்மம் என்பது பிறருக்கு பயனுள்ளதாகவும், சிறந்ததாகவும் இருக்க வேண்டும்.