அண்டை வீட்டாருடன் பழகுங்கள்
UPDATED : ஜன 05, 2024 | ADDED : ஜன 05, 2024
பலரும் அண்டை வீட்டாரைக் கண்டு கொள்வதில்லை. தான் உண்டு தன் வேலையுண்டு என்று சுயநலத்துடன் வாழ்கின்றனர். அதிலும் சிலரோ அண்டை வீட்டாருடன் எப்போதும் சண்டையில் ஈடுபடுகின்றனர். இது தவறான செயலாகும். எப்போதும் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். சமுதாயத்தின் பங்களிப்பு இல்லாமல் மனிதன் தனித்து வாழ முடியாது. அண்டை வீட்டாருடன் நட்பு பாராட்டுபவனே உண்மையான இறை நம்பிக்கையாளன்.