பாங்கு பிறந்த கதை
UPDATED : பிப் 09, 2024 | ADDED : பிப் 09, 2024
இஸ்லாத்தின் பிரதான கொள்கை ஒரே இறைவனை வணங்குதல். அதிலும் எல்லோரும் ஒன்று கூடி வணங்குவதே மேலானது. முன்பு இந்த வணக்கத்தை நிறைவேற்ற மக்கள் முன்னும் பின்னும் அவரவர் நோக்கம் போல வந்து தொழுது கொண்டிருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் தொழுகை நடத்த சிலரை நியமிக்கலாம் என நபிகள் நாயகம் கருதியதால் அனைவரிடமும் ஆலோசித்தார். 'தொழுகை நேரத்தில் மக்கள் பார்க்கும்படியாக உயரமான இடத்தில் கொடியைக் கட்டலாம், மணி அடிக்கலாம், சங்கு ஊதலாம், நெருப்பைக் கொளுத்தலாம்' என வெவ்வேறு கருத்தை தெரிவித்தனர். இறுதியாக உமர் (தற்போது நடைமுறையில் இருக்கும்) பாங்கு தொழுகைக்காக அழைக்கும் முறையை கூறினார். அவரும் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார்.