நல்ல வாழ்வு அமைய...
UPDATED : பிப் 09, 2024 | ADDED : பிப் 09, 2024
மனம் போன போக்கில் நடப்பவர்கள் முட்டாள்கள். யார் மனதை கட்டுப்படுத்தி வாழ்கிறாரோ அவரே உண்மையான வீரர். மனதை அடக்கி ஆள்வதற்கு வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். நேர்மையானதை மட்டுமே நாக்கு பேச வேண்டும். அப்போது தான் இதயமும் நேர்மையான வழியில் செல்லும். இதற்கு ஏதேனும் ஒரு செயலைச் செய்ய விரும்பும் போது முதலில் அதன் முடிவை எண்ணிப் பார்க்க வேண்டும். அது நல்லதாக அமையும் என நினைத்தால் மட்டுமே செயல்படுத்த வேண்டும். இப்படி மனதை கட்டுப்படுத்தினால் வாழ்க்கை நன்றாக அமையும்.