உள்ளூர் செய்திகள்

சுவர்க்கத்தில் வீடு

ஒரு சதுரடி இடம் வாங்குவதற்கு மனிதர்கள் அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. இதற்காக அதிகமாக உழைத்தும், தங்களின் தேவைகளை சுருக்கிக் கொண்டும் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் மறுமையில் நிரந்தர வீடு வாங்குவதாக கற்பனை கூட செய்வதில்லை. அதை வாங்க விரும்புவோர்கள் நபிகள் நாயகம் சொல்வதை கேளுங்கள். 'யார் என் சுன்னத்திலிருந்து 12 ரகஅத்துகளை பேணித் தொழுகிறார்களோ (ளுஹருக்கு முன் நான்கும், அதன் பின்பு இரண்டும், மஃரிபுக்கு பின் இரண்டும், இஷாவுக்குப் பின் இரண்டும், பஜ்ருக்கு முன் இரண்டு) அவர்களுக்கு சுவர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும்'