உள்ளூர் செய்திகள்

சொல்லாதே யாரும் கேட்டால்

'நான் இவரது மகளின் திருமண செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டேன். இன்னாரின் மருத்துவச் செலவுக்கு கைகொடுத்தேன்' என சிலர் செய்ததை பிறரிடம் சொல்லிக்காட்டுவர். இப்படி சொன்னால் அதற்கான நன்மை மறையும். செய்த உதவியை பிறரிடம் சொல்பவர்களை, மறுமை நாளில் இறைவன் சந்திக்க விரும்ப மாட்டான். எனவே பிறர் என்னதான் உங்களிடம் கேட்டாலும், செய்த உதவியை சொல்லாதீர்கள்.