துன்பத்துக்கும் நன்றி
UPDATED : டிச 29, 2017 | ADDED : டிச 29, 2017
துன்பம் வந்து விட்டால் போதும். இறைவனையே நாம் நொந்து கொள்கிறோம். இது நல்லதல்ல.நமக்கு இறைவன் துன்பத்தை தந்தால் கூட, “இந்த துன்பத்தை தந்ததன் மூலம், எனக்கு வாழ்க்கையில் அனுபவப் பாடத்தை கற்றுத் தந்த இறைவா, உனக்கு நன்றி. இந்த துன்பத்தை அனுபவிக்க வைத்ததன் மூலம் என் பாவங்களை குறைத்ததற்காக நன்றி,” என்றே சொல்ல வேண்டும். இறைவன் நமக்கு துன்பத்தை தருவது, நம்மைப் பக்குவப்படுத்தவே. எனவே இறைவன் தரும் ஒவ்வொரு அம்சத்துக்கும் நன்றி சொல்லுங்கள்.