யார் ஏழை
UPDATED : அக் 20, 2023 | ADDED : அக் 20, 2023
மக்களுடைய வீடுகளுக்குச் சென்று ஒரு கவளம், பேரீச்சைகள் வாங்குபவன் எழையல்ல. மாறாக தன் தேவைகளை நிறைவு செய்துகொள்ளும் அளவுக்கு வசதி இல்லாத ஒருவன் இருக்கிறான். அவனுடைய ஏழ்மையை மக்கள் புரிந்து கொள்ளவும் இல்லை. அவனும் மக்கள் முன்னால் சென்று கையேந்துவதுமில்லை. எனில் இத்தகையவனே ஏழையாவன். அதாவது ஏழையாக இருந்தும் அதை வைத்து கையேந்தாமல் இருப்பவர்களை தேடிச்சென்று உதவ வேண்டும்.