உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / ஆட்சி நடத்த முடியுமா?

ஆட்சி நடத்த முடியுமா?

'ஏற்கனவே கூட்டணியில் இருப்பவர்கள் முரண்டு பிடிக்கின்றனர். இந்த லட்சணத்தில் சொந்த கட்சியில் இருப்பவர்களே ஆட்சிக்கு சூனியம் வைக்கும் விதமாக பேசினால் என்ன செய்வது...' என புலம்புகிறார், மஹாராஷ்டிரா முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிஸ்.மஹாராஷ்டிராவில் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவின் தலைவரும், துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே, தனக்கு ஆட்சியில் முக்கியத்துவம் தரப்படுவது இல்லை என, ஏற்கனவே அதிருப்தியில் உள்ளார்.இந்த நிலையில் தான், பா.ஜ., மூத்த தலைவரும், மாநில மீன்வளத் துறை அமைச்சருமான நிதிஷ் ராணே, சமீபத்தில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.'உள்ளாட்சி அமைப்புகளில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் பகுதிகளுக்கு மட்டுமே மாநில அரசின் நிதி ஒதுக்கப்படும்...' என, நிதிஷ் ராணே கூறினார்.இதனால் கடுப்பான எதிர்க்கட்சியினரும், பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியினரும், 'நிதிஷ் ராணேவை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்...' என, கொடி பிடித்துள்ளனர். தர்மசங்கடத்தில் தவிக்கும், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், 'கூட இருந்தே குழி பறிப்பவர்களை வைத்து, எப்படி ஆட்சி நடத்துவது...' என, முணுமுணுக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை