உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / வயிற்றெரிச்சல் கோஷ்டி!

வயிற்றெரிச்சல் கோஷ்டி!

'பதவி கிடைக்காததால், விரக்தியில் பேசுகிறார் போலிருக்கிறது...' என, கேரள மாநில காங்கிரசின்மூத்த தலைவரான ரமேஷ் சென்னிதலாவை கிண்டல் அடிக்கின்றனர், கட்சியில் உள்ள அவரது எதிர்ப்பாளர்கள்.இங்கு, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுஜனநாயக முன்னணிஆட்சி நடக்கிறது.கேரளாவில் எப்போதுமே, ஒரு முறை ஆட்சி அமைத்த கட்சி, அடுத்த முறை ஆட்சிக்கு வராது என்ற நடைமுறை இருந்தது. ஆனால், கடந்த சட்டசபை தேர்தலில் இந்த நடைமுறையை தகர்த்து, முதல்வர் பதவியை தக்க வைத்தார், பினராயி விஜயன்.தொடர்ச்சியாக எட்டு ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதால், இங்குள்ளகாங்., நிர்வாகிகள் எரிச்சலில் உள்ளனர்.சமீபத்தில், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ, 'டிவி' சேனலான, கைரளியின்ஆண்டு விழா நடந்தது; இதில் ரமேஷ் சென்னிதலாவும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது அவர், 'மார்க்சிஸ்ட் கட்சிக்கும், எங்களுக்கும் கொள்கை ரீதியில் வேறுபாடுஇருக்கலாம். ஆனால், அந்த கட்சி தான், எங்களுக்குபல விஷயங்களில் முன்னுதாரணமாக திகழ்ந்துவருகிறது.'கைரளி, 'டிவி'யை பார்த்து தான், காங்கிரசுக்காக, ஜெய்ஹிந்த் என்ற 'டிவி' சேனலை துவக்கினோம்...' என, பாராட்டு மழை பொழிந்தார். இதைக் கேள்விப்பட்ட கேரள காங்கிரஸ் நிர்வாகிகள்,'சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், கட்சியின் மாநில தலைவர், செயல் தலைவர் என, எந்த பதவியிலும்தற்போது சென்னிதலா இல்லை. அதனால் தான், வயிற்றெரிச்சலில் எதிர்க்கட்சியை பாராட்டி பேசுகிறார்...' என, கிண்டல் அடிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி