உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / போட்டி இனி வேண்டாம்!

போட்டி இனி வேண்டாம்!

ஆந்திராவில், சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் முதல்வர் ஆனார், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு. ஆட்சி, அதிகாரத்தை எந்த காரணத்தைக் கொண்டும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் பறிகொடுத்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளார். முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எதிர்பார்த்த மாதிரி, அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை முதல்வர் எடுக்கவில்லை. இதனால், தன் குடும்பம், பிள்ளைகள் என, அமைதியாக காலத்தை ஓட்டுகிறார், ஜெகன்மோகன் ரெட்டி. அதே நேரம், மாநிலத்தில் தனக்கு அரசியல் எதிரியே இருக்கக் கூடாது என்பதற்காக, முதல்வர் பல திட்டங்களை செயல்படுத்துகிறார்.தனக்குள்ள, 'மிஸ்டர் பெர்பார்மன்ஸ்' இமேஜை தக்க வைக்கும் வகையில், பல புதுமையான போட்டிகளை நடத்தினார். அவற்றில்,'மேஜையில் பைல்கள் குவியாமல் பார்த்துக் கொள்வது யார்' எனும், அமைச்சர்களுக்கு இடையேயான போட்டியும் ஒன்று!இதில், முதலிடம் பிடித்தது, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் என்.எம்.டி.பரூக். தன்னையும் போட்டிக்குள் கொண்டு வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு, ஆறாவது இடம். துணை முதல்வரும், நடிகருமான பவன்குமாருக்கு பத்தாவது இடமே கிடைத்தது.இது, அமைச்சரவையில் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. அமைச்சர்களுக்கும், தனக்கும் எவ்வித பூசலும் வந்துவிடக் கூடாது என்பதால், 'இனி எந்த போட்டியும் வேண்டாம்' என்ற முடிவுக்கு வந்து விட்டார் சந்திரபாபு நாயுடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ