மேலும் செய்திகள்
நகராட்சி துணை தலைவர் பதவிக்கு ' பஞ்சாயத்து! '
15-Oct-2024
'என்னாச்சு இவருக்கு; ஏன் இப்படி தடுமாறுகிறார்...' என, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதீஷ் குமார் பற்றி ஆச்சரியப்படுகின்றனர், அம்மாநில அரசியல்வாதிகள்.நாட்டில் உள்ள மூத்த அரசியல்வாதிகளில் நிதீஷ் குமாரும் ஒருவர். மாற்றி மாற்றி கூட்டணி வைத்து, முதல்வர்பதவியை தக்க வைத்துக் கொள்வதில் கில்லாடி. தற்போது இவருக்கு, 73 வயதாகிறது.சமீபகாலமாகவே, இவரது நடவடிக்கைகளில்ஒரு தடுமாற்றம் தென்படுவதாக, அவருக்குநெருக்கமானவர்கள் கவலைப்படுகின்றனர்.பீஹாரில், அரசின் திட்டங்களை குறித்த காலத்தில் நிறைவேற்றாதஒரு அதிகாரியின் காலை தொட்டு வணங்கிய நிதீஷ் குமார், 'தயவுசெய்து திட்டத்தை விரைவில் நிறைவேற்றுங்கள்...' என கெஞ்சி கேட்டது, பெரும் சர்ச்சையானது. 'முதல்வராக இருப்பவர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டால் போதுமே... எதற்கு காலில் விழ வேண்டும்...' என அனைவரும் விமர்சித்தனர்.சமீபத்தில், பாட்னாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்நிதீஷ் குமார் பங்கேற்றார். இதில் பங்கேற்க வந்திருந்த ஒரு முன்னாள் எம்.பி.,யை பார்த்ததும், திடீரென அவரது காலை தொட்டு வணங்கினார், நிதீஷ் குமார். இத்தனைக்கும், அந்த முன்னாள் எம்.பி., நிதீஷ் குமாரை விட வயதில் இளையவர்.'வயதானதால், இப்படி தடுமாறுகிறாரா அல்லதுவெளியில் தன்னை அப்பாவியாக காட்டிக் கொள்வதற்காக நடிக்கிறாரா' என தெரியாமல்,அவரது கட்சியினர் குழம்பி தவிக்கின்றனர்.
15-Oct-2024