உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / இது என்ன வம்பா இருக்கு?

இது என்ன வம்பா இருக்கு?

'புதிது புதிதாக இவருக்கு எங்கிருந்து தான் யோசனை வருகிறதோ' என, ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சி தலைவரும், மத்திய இணை அமைச்சருமான ஜெயந்த் சவுத்ரியை நினைத்து புலம்புகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள்.முன்னாள் மத்திய அமைச்சரான மறைந்த அஜித் சிங்கின் மகன் தான், ஜெயந்த் சவுத்ரி. இவரது கட்சிக்கு உத்தர பிரதேசத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் செல்வாக்கு உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் ராஷ்ட்ரீயலோக் தளம், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தற்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசில், ஜெயந்த் சவுத்ரி திறன் மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.அடுத்தடுத்து நடக்கவுள்ள தேர்தல்களில் போட்டியிட சீட் கேட்டு, ஜெயந்த் சவுத்ரியிடம், அவரது கட்சியினர் அடம் பிடிப்பது வழக்கமாக நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சமீபத்தில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். 'இனி நம் கட்சியில், சிறப்பாக யோகா பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே தேர்தலில் சீட் தரப்படும். எனவே, நம் கட்சி நிர்வாகிகள் இப்போதே யோகா பயிற்சியில் சேர்ந்துவிடுங்கள்...' என, அறிவித்தார்.இதை கேட்ட ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியின் மூத்த நிர்வாகிகள், 'இது என்ன வம்பா இருக்கு; இந்த வயதில் எங்கு போய் யோகா பயிற்சிஎடுப்பது...' என, முணுமுணுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை