உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

மரம் மின்சாரத்தை கடத்துமா...உயிருள்ள மனித உடலை போல பல்வேறு தாவரங்களிலும் 90 சதவீதம் நீர்தான் உள்ளது. நீர் கரைசல் கொண்ட பச்சைத் தாவரம் மின்சாரத்தைக் கடத்தும். ஆனால் காய்ந்து போன மரம் கடத்தாது. ஏனெனில் காய்ந்து போன மரத்தில் அதிலுள்ள நீர் சத்து போய்விடுகிறது. இதனால் நீரற்ற தாவரப் பகுதி மின்சாரத்தைக் கடத்தாது. எனவேதான் காய்ந்த மரம் மின்சாரத்தைக் கடத்துவதில்லை. மின்சாரத்தை கடத்துவதற்கு மரங்கள் முக்கிய காரணமில்லை. அவற்றிலுள்ள நீர் தான் காரணம். மழை நேரங்களில் மின்சார லைன்களை ஒட்டிய மரங்களில் மின்சாரம் பாய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.தகவல் சுரங்கம்

தடகள விளையாட்டு தினம்

விளையாட்டு போட்டிகளில் முக்கியமானது தடகளம். இது ஓடுதல், நடைபயிற்சி, குதிப்பது, ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உட்பட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியது. பள்ளி, கல்லுாரிகளில் தடகள விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள், இளைஞர்களின் பங்கேற்பை ஊக்கப்படுத்தும் விதமாக மே 7ல் உலக தடகள தினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச தடகள கூட்டமைப்பு 1996ல் இத்தினத்தை உருவாக்கியது. இளைஞர்கள் உடல்நலனை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை