உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

தரமான பட்டுகள்

இந்தியாவில் மத்திய பட்டு வாரியம், தரமான பட்டுகளை உருவாக்க கவனம் செலுத்துகிறது. ஒரு சிறிய கூடமும், அரை ஏக்கர் நிலமும் இருந்தால் போதும். பட்டு உற்பத்தியில் மாதம் தோறும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ஈட்டலாம். பெண்களுக்கு வீட்டில் இருந்தே செய்யும் ஏற்ற தொழிலாக இது உள்ளது.தரமான பட்டு நூலை உற்பத்தி செய்ய எத்தனையோ ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. எனினும் பட்டுப்புழுக்களுக்கு உணவாக தரப்படும் மல்பெரி எனப்படும் முசுக்கொட்டை இலையின் தரத்தைப் பொறுத்தே, பட்டு நூலின் தரம் உள்ளது. பட்டுப்புழுக்கள் இந்த முசுக்கொட்டை இலையை மட்டுமே உணவாக உட்கொள்ளும். வேறு எந்த இலையையும் உண்ணாது. இந்த முசுக்கொட்டை இலைகளில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. ஒரு தடவை முசுக்கொட்டை பயிர் வளர்த்தால், மரமாக 15 ஆண்டுகள் தொடர்ந்து பயன் தரும்.

தகவல் சுரங்கம்

இந்திய ஆசிரியர்கள்

பிரிட்டிஷாரின் வருகைக்கு முன், இந்தியாவில் ஆசிரியர்களின் நிலை முக்கிய இடத்தில் இருந்தது. ஆசிரியர் பணியை தொழிலாகக் கருதாமல், சேவையாகக் கருதும் வகையில், இந்திய மொழி களில் சொற்கள் இருந்தன. வடமொழியில் ஆசிரியரைக் குறிக்க பயன்படுத்தும் 'குரு' என்னும் சொல்லுக்கு இருளை நீக்குபவர் என்று பொருள். 'நம் மனதில் உள்ள அறியாமை என்னும் இருளை நீக்குபவர்'. தமிழில் ஆசிரியர் என்னும் சொல்லுக்கு குற்றமற்றவர். குற்றத்தை நீக்குபவர் என அர்த்தங்கள் உள்ளன.ஆசிரியரைக் குறிக்கப் பயன்படுத்தும் 'ஆச்சார்ய' என்னும் சொல் 'நன்னடத்தை உடையவர்' என்ற பொருளில் வருகிறது. பிரிட்டிஷ் கல்வி அறிமுகம் ஆன போது ஆசிரியரை விட, பாட நூல்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டன. ஆங்கிலத்தில் 'டீச்சர்', 'இன்ஸ்ட்ரக்டர்', 'டெமான்ஸ்ட்ரேட்டர்' போன்ற சொற்கள் ஆசிரியப் பணியை வெறும் தொழிலாக மட்டுமே காட்டுகின்றன என மொழியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை