உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

ஆப்பிள் சீசன்

இந்தியாவில் ஆப்பிள் சீசன் துவங்கி விட்டது. கலப்பினங்களின் விளைவாக, ஆப்பிளில் 6 ஆயிரத்து 500 ஆப்பிள் வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு, அவற்றில் 50 வகைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதில் இந்தியாவில் அம்பிரி காஷ்மீர் என்ற ஆப்பிள் வகை பயிரிடப்படுகிறது. காஷ்மீரில் ஸ்ரீநகரில் அதிக அளவில் ஆப்பிள் பயிரிடப்படுகிறது. இமாசலப்பிரதேசத்தில், சிம்லாவில் விளையும் ஆப்பிள்கள் அதிக சாறுடன் உள்ளன. இது தவிர பஞ்சாப், அரியானாவிலும் ஆப்பிள் விவசாயம் நடக்கிறது. ஆப்பிள் மரம் 40 அடி உயரம் வளரக் கூடியது எனினும் எளிதாக ஆப்பிளைப் பறிக்கும் வகையில் குறைந்த உயரமே வளர்க்கப்படுகிறது. ஸ்ரீநகரில், அதிக அளவில் ஆப்பிள் விவசாயம் நடைபெறும் போது, கொண்டு செல்ல இயலாத ஆப்பிள்கள் உலர் வத்தலாக மாற்றப்படுகின்றன.

தகவல் சுரங்கம்

ஆணாதிக்க இந்தி

இந்தி இருவார விழா, இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள மொழிகள் அனைத்திலும் ஆணாதிக்கம் மிகுந்து காணப்படும். எனினும் இந்தியில் இது மிகவும் கூடுதலாக உள்ளது. இந்தியில் உயிரற்ற பொருட்களையும் ஆண்பால் சொற்கள், பெண்பால் சொற்கள் என பிரித்து உள்ளனர். எது வலிமையானதோ, நிலையானதோ உயரமானதோ, கடினமானதோ அவை ஆண்பால் சொல்லில் வருகின்றன. உதாரணமாக மலையைக் குறிக்கும் 'பஹாட்' என்ற சொல், அசையாச் சொத்தான வீட்டைக் குறிக்கும் 'கர்' என்ற சொல், உயரமான மரத்தைக் குறிக்கும் 'பேட்' என்ற சொல் ஆண்பால் சொற்களாகும். மென்மையான இலையைக் குறிக்கும் 'பத்தி' என்ற சொல், அசைந்து இயங்கும் வண்டியைக் குறிக்கும் 'காடீ' என்னும் சொல், மென்மையான கொடியைக் குறிப்பிடும் 'லதா' என்னும் சொல் இந்தியில் பெண்பால் சொற்களாக உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !