உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் :தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் :தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்மனநலம் பாதிக்கும் டிஜிட்டல் சாதனம்அலைபேசி, லேப்டாப், ஐபேடு உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாகும் குழந்தைகள், எதிர்காலத்தில் மனநல பாதிப்புகளுக்கு உள்ளாகும் வாய்ப்புஉள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலைபேசி, சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள், 23 வயதுக்குப்பின் பிரமை, வினோதமான யோசனைகளை சிந்திப்பவராக மாறும்வாய்ப்புள்ளது. டிஜிட்டல் பயன்பாடு மட்டுமில்லாமல், தனிமை, பெற்றோர் - குழந்தை உறவில் பாதிப்பு உள்ளிட்டவைகளும் குழந்தைகளின் எதிர்கால மனநல பிரச்னைகளுக்கு காரணமாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவல் சுரங்கம்உலக பாரம்பரிய தினம்ஒரு நாட்டுக்கு பெருமை சேர்ப்பதில் பாரம்பரிய சின்னங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த ஏப்.18ல் உலக பாரம்பரிய தினம் ஐ.நா., சார்பில் கொண்டாடப்படுகிறது. 'பன்முகத்தன்மையை கண்டறிந்து அனுபவித்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகின் இயற்கை, கலாசார இடங்களை பாதுகாக்க, அவற்றை உலகின் பாரம்பரிய பண்பாட்டு சின்னங்கள் பட்டியலில் ஐ.நா.,வின் யுனேஸ்கோசேர்த்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 42இடங்கள் இடம்பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை