| ADDED : ஜூன் 06, 2024 06:56 PM
அறிவியல் ஆயிரம்மீன்கள் துாங்குமா...சிலவகை சுறா மீன்களைத் தவிர வேறு மீன்களுக்கு கண் இமை இல்லை. எனவே கண்களை மூடமுடியாது. கண்களைத் திறந்தபடிதான் துாங்கும். தன்னை நிலைப்படுத்திக் கொள்ள, தனது துடுப்பை மட்டும் அவ்வப்போது ஆட்டி அவை துாங்கும் போது கனவு நிலையில் உள்ளது போன்ற தோற்றம் தரும். நீரில் மிதந்தபடி, கல்லுக்குள் மறைந்தபடி என பல்வேறு நிலைகளில் துாங்கும். சில இரவிலும், சில பகலிலும் துாங்கும். காற்றுக்குள் வாழும் நமக்கு காற்று அடிக்கும்போது ஆழ்ந்த உறக்கம்தானே வருகிறது. அதுபோல நீரில் வாழும் உயிரினங்களுக்கு தண்ணீர் படும்போது விழிப்பு வராது.தகவல் சுரங்கம்உணவு பாதுகாப்பு தினம்மனிதன் உயிர்வாழ அவசியமானவற்றில் ஒன்று உணவு. நாம் உண்ணும் உணவே நமது உடல்நிலையை பாதுகாக்கிறது. உலகில் ஆண்டுதோறும் 10ல் ஒருவர் சுகாதாரமற்ற உணவால் பாதிக்கப்படுகிறார். சுகாதாரமற்ற உணவால் 200 நோய்கள் உருவாகின்றன. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் ஜூன் 7ல் உலக உணவு பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'உணவு பாதுகாப்பு: எதிர்பாராததற்கு தயாராகுங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. பாதுகாப்பற்ற உணவு ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல், பொருளாதாரத்துக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.