| ADDED : ஜூலை 05, 2024 06:37 PM
அறிவியல் ஆயிரம்விலங்கு, பறவைகளிடம் கவனம்விலங்குகள், பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு ஏற்படும் நோய் 'ஜூனோசிஸ்'. அவற்றை கையாளும் போது கவனம் தேவை. அவைகளிடம் நேரடி தொடர்பு, உணவு, நீர் போன்றவையால் மனிதர்களுக்கு 'ஜூனோசிஸ்' பரவுகிறது. இவை பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணியாக இருக்கலாம். இதில் 200 வகை உள்ளது. இந்நோய்க்கு 1885 ஜூலை 6ல் பிரான்சின் லுாயிஸ் பாஸ்டர் தடுப்பூசி கண்டுபிடித்தார். இதை அங்கீகரிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக சுகாதார நிறுவனம் சார்பில் ஜூலை 6ல் உலக ஜூனோசிஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.தகவல் சுரங்கம்உலக கூட்டுறவு தினம்உலகில் 30 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. உலக பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பில் கூட்டுறவு முக்கிய பங்கு வகிக்கிறது. ஐ.நா., சபை சார்பில் ஜூலை முதல் சனி (ஜூலை 6) உலக கூட்டுறவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை கட்டமைக்கும் கூட்டுறவு' என்பது இந்தாண்டு மையக்கருத்து. 1761ல் ஸ்காட்லாந்தில் முதன்முறையாக கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது. 1844ல் இங்கிலாந்தில் பருத்தி மில்லில் பணியாற்றிய 28 பேர் இணைந்து முதல் நவீன கூட்டுறவு சங்கத்தை தொடங்கினர்.