அறிவியல் ஆயிரம்: விண்வெளியில் கடல்
அறிவியல் ஆயிரம்விண்வெளியில் கடல்விண்வெளியில் 'ரைகு' விண்கல்லில் இருந்து மண், பாறை மாதிரியை 2020ல், ஜப்பானின் ஹயபுசா விண்கலம் பூமிக்கு கொண்டு வந்திருந்தது. இந்த விண்கல்லை ஆய்வு செய்ததில், சோடியம் கார்பனேட்,சோடியம் சல்பேட் உள்ளிட்ட உப்பு மினரல்கள் இருந்ததை ஜப்பானின் கியோட்டா பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு காலத்தில் கடல் போன்ற திரவ உப்பு நீராக இருந்திருக்கலாம் என்பதற்கு வழிகாட்டுகிறது என தெரிவித்துள்ளனர்.